Thursday 16 April 2015

என் வாழ்க்கை ----- ஈ.வெ.ராமசாமி என்னும் பெரியார் இல்லாமல்


    இப்பொதெல்லாம், இணையவெளியில் பெரியாரைப் பற்றி நிறைய விமர்சனங்கள் கண்ணில் படுகின்றன. பெரியாரை தமிழ் விரோதி என்றும் சுய ஜாதி அபிமானம் உள்ளவர் என்றும் விமர்சிக்கிறார்கள். இவையெல்லாம் உண்மையாகவே இருக்கலாம், அல்லது இல்லாமலும் போகலாம், ஆனால் பெரியார் என்கிற ஈ.வெ.ரா பிறக்காமல் இருந்திருந்தால், என்னுடைய அறிவிற்க்கு, என் வாழ்க்கை இப்படித்தான் இருந்திருக்கும்,


1. பிரேமானந்தா, நித்தயானந்தா, சிவசங்கர் பாபா, ஈசா போன்ற போலிச் சாமியார்களின் தலைசிறந்த பக்தனாயிருந்திருபேன் [ இதை சொல்லவே எனக்கு அருவெருப்பாயிருக்கிறது,கற்பனைதானே]

2. நாட்டில் இவ்வளவு கற்பழிப்பு, திருட்டு சம்பவங்களுக்கு மனுதர்மப்படி ஆட்சி செய்யாததே காரணம் என வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துக்கொண்டு  வியாக்கியானம் பேசுவேன்.

3.ஜெயலலிதா ஒரு பிராமணர் என்பதால், ஊழல் செய்திருக்க மாட்டார், அப்படியே அவர் ஊழல் செய்திருப்பது நிரூபிக்கப்பட்டாலும், அவர் பிராமணர் என்பதால் அவருக்கு சிறைத்தண்டனையெல்லாம் விதிக்காமல், வேறு ஊருக்கோ அல்லது வெளிநாட்டுக்கோ அனுப்பிவைப்பதே சரியான தண்டனை எனக் கோபப்பட்டுக் கொநதளிப்பேன்.

4.தாழ்த்தப்பட்டவானாயிருந்தால், அக்ரஹாரத் தெருவில் நுழையவே பயப்படுவேன், பிராமணனாயிருந்தால் வேறு சாதியினர் என்னைத் தொடவிடவோ அல்லது நான் அவர்களைத் தொடவோ மாட்டேன்.

5. கலப்புத் திருமணம் நடந்தால், நாட்டுக்கு ஏதோ தீங்கு ஏற்படும் என் பயந்து, சாதி கலவரங்களுக்கெல்லாம் தூண்டுகோலாய், வெட்டுக்கோலாய், கொன்று குழித்தோண்டிப் புதைக்கும் கோலாய் இருந்திருப்பேன்.

6.பிள்ளையார், இன்னும் பால் குடித்துக்கொண்டிருப்ப்பார்.

7.அலங்கார வளைவுகளில், கையில் தீபம் ஏந்தி இருப்பெண்கள் வரவேற்பது போன்ற சிலைகளிருக்குமே, அவற்றையும் கடவுள் என எண்ணி பயபக்தியோடு வணங்கியிருப்பேன்.

8.சாணி அள்ளி, வீடு வாசல் கூட்டி, சோறாக்கி, துணிததுவைத்து, எச்சில் பாத்திரம் விளக்கி, பிள்ளைப் பெற்றுப் போடுவதாற்க்காகத்தான் பெண்கள் பிறந்தார்கள் என்பதால், பெண்களை படிக்கவைப்பவர்களை சமூக விரோதிகள் என்பேன்.

9.பில்லி,சூன்யம்,ஏவல் அணைத்தையும் உண்மையென சத்தியம் செயவேன்.

10. பில்லி சூன்யம் வைப்பவர்களெல்லாம், பணக்காரராய் இருப்பதால், நானும் பில்லி சூன்யம் வைக்கக் கற்றுக்கொண்டு பணம் பண்ணியிருப்பேன், இப்படி பொறியியல் படித்து வீணாய் போயிருக்க மாட்டேன்.

11.காந்தி, நேரு மற்றும் இன்ன பிற தலைவர்களின் ஆவிகள், யார் உடம்பிலாவது புகுந்து நமக்கு ஆலோசனைகள் வழங்கிக்கொண்டிருக்கும்.

12.கீதையை கையால் தொட்டிருக்கக் கூட மாட்டேன், அல்லது தொட்டிருக்க முடியாது.

13.தாழ்த்தப்பட்டவனாயிருந்தால் படிப்பெல்லாம் நமக்கில்லை என அ, ஆ க்கூடத் தெரியாத முட்டாளாயிருந்திருப்பேன், பிராமணனாகவோ அல்லது வேறு ஜாதிக்காரணாகவோ இருந்திருந்தால் தாழ்த்தப்பட்டவர்கள் புத்தகங்களைத் தொடவே விட்டிருக்கமாட்டேன்.

14. என் பெயரைக் கேட்டால், ஜாதியையும் சேர்த்தே சொல்லுவேன்.

அப்புறம் தமிழ்நாட்டில்,

ஒவ்வொரு ஜாதிக்கும், ஒவ்வொரு தலைவர்கள் முளைத்து, ஒருவருகொருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள்.

சந்தனக் கடத்தல் வீரப்பன், ராமதாஸின் சீரிய முயற்சியால் சில வன்னியக் குடும்பங்களுக்கு குலதெய்வம் ஆகியிருப்பான்.

தமிழகத்தில் முதல்வர் பதவி, ஒவ்வொரு ஜாதிக்கு ஒரு வருடம் என ஆண்குக்காண்டு முதல்வர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள்.

தமிழ் சினிமாவில், இந்த ஜாதியை சேர்ந்த, வீரப்புதல்வன் இன்னார் கதாநாயகனாக நடிக்கும், இந்தப் படத்தைக் காண வாரீர் என விளம்பரம் செய்வார்கள்.

ஜாதிப் பெருமை பேசும் படங்கள் அதிகமாக வெளிவந்து வசூலை வாரிக்குவிக்கும்.

இப்படித்தான் என் வாழ்க்கை இருந்திருக்கும்.

இப்படி என்னை மண்ணாந்தையாக வாழ விடாமல், மனிதனாக சிந்திக்க வைத்ததே, பெரியாரின் மிகப்பெரியக் குற்றமாயிருக்கும் என நினைக்கிறேன்


3 comments :

  1. இப்படி என்னை மண்ணாந்தையாக வாழ விடாமல், மனிதனாக சிந்திக்க வைத்ததே, பெரியாரின் மிகப்பெரியக் குற்றமாயிருக்கும் என நினைக்கிறேன்

    #குற்றமென ஆதிக்கம் விரைவில் உணரும்

    ReplyDelete
  2. இதே சுதந்திரம் மற்ற மாநிலங்களிலும் உள்ளது, அதற்கு யார் காரணம்? அப்படியானால் பெரியார் இல்லாதிருந்திருந்தாலும் தமிழகத்திலும் தற்போதைய சுதந்திரம் வந்திருக்கும். பெரியார் பிடுங்கியது அத்தனையும் தேவையில்லாத ஆணிகளே என்று சொன்னால் அது மிகையாகாது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. @ஜெயதேவ்

    // பெரியார் பிடுங்கியது அத்தனையும் தேவையில்லாத ஆணிகளே //

    உணமைதான், தேவையில்லதா இடத்தில், தேவையில்லாமல் அடிக்கப்பட்ட தேவையில்லாத ஆணிகளையே பெரியார் பிடுங்கினார்.

    நன்றாக யோசித்துப் பாருங்கள், இப்போது தமிழகத்தில் எவ்வளவு சாதிக் கட்சிகள் இருக்கின்றன, பெரியர் என்று மட்டும் ஒருவர் இல்லாமல் போயிருந்தால், சாதிக் கட்சி தலைவர்கள் எல்லாம் இன்று குறுநில மன்னர்கள் போல இருந்திருப்பார்கள். இப்போது மனசுக்குள் சாதி உணர்வு இருந்தாலும் வெளிப்படையாக சொல்ல வெட்கப்படுகிறார்கள், இல்லையா? இதுவே பெரியாரின் சாதனைதான். பெரியார் நாத்திகர் என்பதால் வெறுப்புடன் அனுகாதிர்கள், உண்மையில், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையால், கடவுள்கள் பாதிக்கப்படவேயில்லை, மூடநம்பிக்கைக்குத்தான் ஆப்பு அடிக்கப்பட்டது.

    ReplyDelete